• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் – திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ByP.Thangapandi

Sep 30, 2024

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதற்கு நேற்று தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி அதிகார பூர்வமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதை அடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி மற்றும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வாழ்க என கோசங்கள் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.