• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தேமுதிக கட்சித்தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி, திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தங்கத்தேர் வழிபாடு…

ByKalamegam Viswanathan

Dec 1, 2023

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அறிவித்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் உடல் பெற வேண்டி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அறுபடைகளின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மதுரை அவனியாபுரம் பகுதி கழக செயலாளர் செந்தில் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் கணபதி சேர்ந்த தேமுதிக சார்பாக கருவறையில் உள்ள மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து 50க்கும் மேற்பட்ட தேமுதிக கட்சி நிர்வாகிகள் தங்கத்தேர் வடம் பிடித்து இழுத்து கேப்டன் பூரண குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்டனர். பின்னர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி பிரார்த்தனை மேற்கொண்டனர்.