வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அமெரிக்கா கைது செய்ததை கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், பழனிக்குமார், காதர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது திடீரென ஒரு பெண் அவர்களை நோக்கி உள்ளே பாய்ந்து ஏக வசனத்தில் திட்டினார், அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் அவரை அழைத்து சென்று சமாதானம் செய்தனர். அவரை விசாரித்த போது, தன்னுடைய வீட்டுமனை பட்டா பெறுவதற்கு அக்கட்சியை சேர்ந்த ஒருவர் தாலுகா ஆபிசில் தடை செய்துள்ளார் என்று கூறினார்.

ஆனால் அவர் மனநலம் பாதித்தவர் என்று கூறி போலீசார் அவரை அப்புறப்படுத்தினர்.அந்த பெண்மணி பற்றி விசாரித்ததில் தன் பெயர் ரேவதி என்றும் அருகில் உள்ள பாவாலி கிராமத்தை சேர்ந்தவர என்றும் அவர் கூறினார்.




