• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆ. ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ByS.Navinsanjai

Sep 19, 2022

பல்லடம் அருகே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!!
திமுக துணை பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்துக்கள் குறித்து சர்ச்சைகள் ஏற்படுத்தும் வகையில் பேசியதை கண்டிக்கும் வகையில் பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியும் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதனொரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமி மில் பகுதியில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்து முன்னணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் திமுகவை விமர்சித்தும் ஆ ராசாவை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம்,மாவட்ட பொதுச்செயலாளர் சர்வேஸ்வரன்,லோகநாதன் உட்பட 300க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.