• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை கண்டித்து பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம்…

ByKalamegam Viswanathan

Jul 24, 2023

மக்கள் நலனுக்கு எதிராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் திமுக அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சோழவந்தான் திருவேடகம் மேலக்கால் உள்பட பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சோழவந்தானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் சுகந்திரம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜாராமன், வக்கீல் முத்துமணி, சித்தரஞ்சன், கண்ணகி ஆகியோர் முன்னிலை வைத்தனர். பாஜக சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் பஸ் நிலையம் மற்றும் ரயில்வே மேம்பாலத்தை திறக்க கோரியும், பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க கோரியும், டாஸ்மார்க் கடை மூடவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், மின் கட்டணத்தை குறைக்கவும், வெளியூர் மற்றும் உள்ளூர் பஸ்கள் குறித்த நேரத்தில் முழுமையாக இயக்கவும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திமுக அரசை கண்டித்து பேசினார்கள். இதில் நிர்வாகிகள் முருகன், ரமேஷ், செல்வி, மலைச்சாமி, சரவணன், ராணி, தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். இதே போல் மேலக்கால் ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் அய்யா காளை தலைமை தாங்கினார். முருகேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் அறிவழகன் சிறப்பு அழைப்பாளர் தசரத சக்கரவர்த்தி வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் மண்டல துணைத் தலைவர் குட்டி பாண்டி மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் மீன் கடை முருகேசன் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மண்டல தலைவர் கனகராஜ் மற்றும் சுமதி அன்புக்கொடி மகாலிங்கம் கல்வியாளர் பிரிவு ராமு பொட்டல்பட்டி சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர், இதேபோல் திருவேடகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்துப்பாண்டி ராஜா முருகன் முருகேசன் சின்னசாமி சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முள்ளிப்பள்ளம், காடுபட்டி உட்பட இப்பகுதி கிராமங்களில் திமுக அரசியல் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.