தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வந்த பாமாயில், துவரம்பருப்பு ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட அஇஅதிமுக சார்பில் அரண்மனை வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் கழக தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜ் சத்யன் விடியல் தரப்போவதாக ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் விடிந்து எழுந்தாலே மக்கள் பயப்படுகின்றனர். காலையில் எழுந்து நடைபயிற்சி செல்ல பயப்படுகின்றனர். தினமும் கொலை நடக்கின்றது. இந்த ஆட்சியில் அனைத்து பொருள்களின் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி சாமானிய மக்களை வாட்டி வதைக்கின்றனர்.

மேலும் இந்த ஆட்சியில் யாரையும் நலம் விசாரிக்க கூட முடியவில்லை. ஏனென்றால் இந்த அரசு அனைத்து வகையான பொருள்களின் விலையை உயர்த்தியதுடன் தினமும் கொலை கொள்ளை நடப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு தமிழக மக்களை நலமாக வைத்திருக்கவில்லை. இப்படிப்பட்ட விடியா ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி விட்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழக ஆட்சி அமைக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உமாதேவன், நாகராஜன், கற்பகம் இளங்கோ மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.






