விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் அரசால் வழங்கப்பட்ட சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த பெட்டிக்கடை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறிய நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வலியுறுத்தி வருவதாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இராஜபாளையம் தென்காசி சாலை காந்தி சிலை ரவுண்டான பகுதியில் செயல்படக்கூடிய தனியார் கார்ப்பரேட் நிறுவனமான நகைக்கடைக்கு உறுதுணையாக நகராட்சி நிர்வாக அதிகாரிகள் இருந்து கொண்டு இது போன்று மாற்றுத்திறனாளிகள் கடைகளை அகற்ற முன்னோர்களாக கூறி மாவட்ட இணை செயலாளர் சரவணன் தலைமையில், பாக்கியராஜ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
