தீபாவளி பண்டிகை வருகின்ற 20ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பும் பண்டிகைக்கு மறுநாளும் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

தீபாவளி தினத்தன்று மதுக்கடைகளை திறந்து வைப்பதால் மது பிரியர்கள் குடித்துவிட்டு வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மேலும் குடும்பங்களில் பிரச்சனை ஏற்படுவதாகவும் இதனை தடுக்கும் விதமாக தீபாவளி தினத்தில் முதல் நாள் மற்றும் மறுநாள் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும்.

குடித்துவிட்டு வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் இதனை தடுக்கும் விதமாக இந்து மக்கள் கட்சியினர் நிர்வாகியால் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.