• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மாங்காய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

ByKalamegam Viswanathan

May 12, 2026

தமிழ்நாடு முழுமைக்கும் விவசாயிகள் அதிகமாக நடும் மாமரம் கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் கடந்த 2025-ஆம் ஆண்டில் 1 கிலோ கிளிமூக்கு (கல்லாமை) மாங்காய் 4-ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் கடும் வீழ்ச்சியை விவசாயிகள் சந்தித்தார்கள். குறைத்தபட்ச ஆதார விலை 20 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையும்,பல இடத்தில் போராட்டமும் செய்தார்கள். இருந்தும் பயனில்லை.

கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கிளி மூக்கு (கல்லாமை) மாங்காய் 1 கிலோ 5-ல் இருந்து 8-ரூபாய் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நிலையில்
1 ஆண்டுக்கு மாமரம் பராமரிப்பு வேலைக்கு மட்டும் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறைந்தபட்சம் 1 கிலோ கிளிமூக்கு மாங்காய் 20 ரூபாய் விலைக்கு கொள்முதல் செய்தால்தான் மாங்காய் விவசாயிகளுக்கு எல்லா செலவையும் சரி செய்ய முடியும். கிளிமூக்கு மாங்காய் பழம் அதிகமாக பழக்கூழ் தயாரிக்க பழக்கூழ் தொழிற்சாலைகளுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பழக்கூழ் தொழிற்சாலைகளுக்கு கிளிமூக்கு மாங்காய்களை குறைந்தபட்சம் ஆதார விலை 1 கிலோ ரூபாய் 20-க்கு கொள்முதல் செய்து மாங்காய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாங்காய் விவசாயிகள் மற்றும் தமிழர் மக்கள் இயக்கம் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்!!