• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

அடிப்படை வசதிகளுக்கு பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பதால் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jan 27, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சி உள்ளது இங்கே ஊராட்சி மன்ற தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர் திமுகவைச் சேர்ந்த ஆனந்தன். இவர் தனது பதவி காலத்தில் ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்கு தனது சொந்த பணத்தின் மூலம் செலவு செய்து பின்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்து ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பணம் பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2025 ஜனவரி மாதம் தனது பதவிக்காலம் முடிந்த பின்பு சுமார் 16 வேலைகளுக்கு பணி முடிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் பாக்கி நிலுவை தொகை இருந்ததாக கூறப்படுகிறது இந்த பணத்தை வழங்க கோரி வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காடுபட்டிஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை பணத்தை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது மேலும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் காடுப்பட்டி ஊராட்சி செயலாளரும் கைகோர்த்துக்கொண்டு தனக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்க மறுப்பதாகவும் புகார் தெரிவிக்கிறார். இது குறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு அவர் தொலைபேசி மூலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் கூறிய பின்பும் பணத்தை வழங்குவதாக கூறிவிட்டு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார்கள் என்றும் கூறுகிறார்.

ஊராட்சி மன்ற தலைவராக தான் பொறுப்பு வகித்த போது ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு உட்பட்ட அடிப்படை தேவைகளுக்காக தேவைப்படும் செலவுகளைஅரசு நிதிச் சுமையை கருத்தில் கொண்டு தனது சொந்த பணத்தில் செலவு செய்த ஊராட்சி மன்ற தலைவராக இருந்தா தனக்கு ஏற்பட்ட நிலையால் தற்போது கடன் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகமும் யூனியன் நிர்வாகமும் எந்த ஒரு அக்கறையும் படுவதில்லை என கூறும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இதுகுறித்து விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் கூறினார் இதுகுறித்து குடியரசு தினத்தன்று காடுபட்டி ஊராட்சி சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்கச் சென்ற போது மனுவை கூட பெற்றுக் கொள்ளாமல் இழுத்தடிப்பு செய்வதாக கூறும் இவர் ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டு விட்டு தான் மனுவை வாங்க முடியும் என அதிகார தோரணையில் கூறியதாக வேதனையுடன் கூறுகிறார்.

இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் விசாரணை செய்து பாதிக்கப்பட்ட தனக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் ஊராட்சி நிர்வாகம் தர வேண்டிய தொகையை வழங்க வேண்டும். மயானத்தில் நடைபெற்ற பணிகளுக்காக
வாங்கிய தளவாடப் பொருள்களுக்காக கடனாக பெற்றவர்கள் தனது வீடு தேடி வந்து அவமானப்படுத்துவதாக கூறும் இவர் இதன் காரணமாக கடுமையான மன அழுத்தத்திற்கு தான் ஆளாகி இருப்பதாகவும் கூறுகிறார் மேலும் இதுகுறித்து
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் கூறுகையில். காடு பட்டி ஊராட்சியில் செய்யப்பட்ட பணிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தனக்கே இந்த கதி என்றால் சாதாரண பொது மக்களுக்கு எந்த நிலை ஏற்படும் என கூறுகிறார் இதுகுறித்து முறையாக மனு செய்து பணம் வழங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம் மூலம் தெரிவித்தும் இதுவரை பணம் வழங்காமல் இழுத்தடித்து வருவது வேதனைக்குரியது என்று கூறும் இவர் என்னைப்போல் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கு தரவேண்டிய தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆவணம் செய்ய வேண்டும் என்றும் மேலும் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை இட போவதாகவும் கூறினார்.