டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுகிறது.
புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறவுள்ளது. இன்று தேர்தல் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு அங்குள்ள அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.