சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணி துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் இரு கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரம் சதுர அடியில் ஒரு கட்டிடமும் கூடுதலாக 10 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது கட்டிடமும் கட்ட ஈரோட்டைச் சேர்ந்த கொங்கு கன்ஸ்ட்ரக்சன் என்ற கட்டுமான நிறுவனம் 20. 3 .23 ஒப்பந்தம் போடப்பட்டு கட்டுமானப் பணிகளை இரண்டு ஆண்டுகளாக கட்டி வருகின்றனர் .
அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம் ,ஆய்வகம், தீவிர சிகிச்சை பிரிவு , என பல்வேறு அறைகள் கட்டப்படுகிறது.இந்த மாதம் 31 .5 .25 க்குள் கட்டி முடிக்க வேண்டும். இன்று கட்டுமான பணிகள் தரமாக நடக்கிறதா என்று அமைச்சர் ஏ.வா. வேலு ஆய்வு மேற்கொண்ட போது கட்டுமான பணிகளில் பல்வேறு குறைகள் இருந்ததை கண்டறிந்து சுட்டிகாட்டி ஒப்பந்ததாரரை அழைத்து கண்டித்தார்.
முகப்புத்தோற்றத்தையும் சுட்டிக்காட்டி தமிழகத்தில் ஆம்பூர் திருப்பத்தூர் குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சுட்டிக்காட்டி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர் மேலும் ஒப்பந்ததாரர் மீது நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் ஏ.வ.வேலு உத்தரவிட்டார். அரசு கட்டிடம் சாலை கட்டுமான பணிகளில் தர குறைபாடு முறைகேடு இருந்தால் எந்த சமரச பேச்சுக்கும் இடமில்லை ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளது குறிப்பிடதக்கது.





