• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இரண்டு தொகுதியிலும் தோல்வி…பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் ராஜினாமா..?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது.

ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சன்னி போட்டியிட்ட இரண்டு தொகுதியிலும் தோல்வியை சந்தித்து உள்ளார்..

அதுபோலவே மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் தனது தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் பின் தங்கியுள்ளார். சிரோன்மணி அகாலி தளம் 3-வது இடத்திலும், பாஜக கூட்டணி 4-வது இடத்திலும் உள்ளன.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, அவர் போட்டியிட்ட சம்கார் சாஹிப் மற்றும் பதௌர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளார்.

சம்கார் சாஹிப் தொகுதியை பொறுத்தவரை, 2007 முதல் மூன்று முறை அவர் வென்ற தொகுதியாகும். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் கோட்டையான மால்வாவில் உள்ள படவுர் தொகுதி அவருக்கு புதிய தொகுதி. ஆனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் சரண்ஜித் சிங் சன்னி பின்னடைவை சந்தித்து வருகிறார்.

பஞ்சாப்பில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விரைவில் கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.