கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் சுந்தரவல்லி ராணுவத்தினர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக, உள்ளது.

இந்திய ராணுவத்தை பற்றியும் பா.ஜ.க கட்சியை பற்றியும் இந்து சமுதாயத்தை பற்றியும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு , அவரது கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சுந்தவல்லி மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.








