• Wed. Dec 11th, 2024

உத்தராகண்ட் பல்கலைக்கழகத்துக்கு பிபின் ராவத் பெயரை சூட்ட முடிவு

Byமதி

Dec 10, 2021

எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளது.

இந்தநிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிபின் ராவத், பிறப்பால் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.