• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டிச..24 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக டிச.24ஆம் தேதியும் கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து பிறப்பைக் கிறிஸ்துமஸ் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிச. 25ஆம் தேதி இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாகக் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட எந்தவொரு பண்டிகையும் கோலாகலமாகக் கொண்டாடப்படவில்லை. இப்போது தான் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், உலக முழுவதும் கொண்டாட்டங்கள் சூடு பிடித்துள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்கள் உள்ள போதிலும், ஏற்கனவே, தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. அதேபோல வீடுகளில் அலங்கார விளக்குகள் மற்றும் நட்சத்திரங்களைத் தொங்கவிடப்பட்டு அழகுபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு.கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு.டிசம்பர்.24_ம் தேதி உள்ளூர் சிறப்பு விடுமுறை.மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அனுமதி. இந்த விடுமுறையை ஈடுசெய்ய . ஜனவரி 11_ம் தேதியை வேலை நாள் எனவும் ஆட்சியர் அரவிந்த் உத்தவிட்டுள்ளார்.