• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி..,

ByKalamegam Viswanathan

Dec 8, 2025

மதுரை மாவட்டம் மேலூரில் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் சார்பாக மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இளைஞர்களின் வெற்றி பயணம் நிறுவனர் பாவலர் சி.சூர்யா நோக்கவுரையாற்றி வரவேற்றார் மாணவி பெ.துர்கா முதல் பரிசு 2000 ரூபாய், சான்றிதழ், பதக்கம் பெற்றார் மாணவி சஹானா இரண்டாம் பரிசு ரூபாய்1500 ,சான்றிதழ், பதக்கம் பெற்றார். மாணவி தாரணி மூன்றாம் பரிசு 1000 ரூபாய், சான்றிதழ்கள்,பதக்கம் பெற்றார். சிறப்பு பரிசை மாணவி தமிழ் நிலா,கிருஷ்ண வேணி,பூவிகா ஆகியோர் ரூபாய் 500,சான்றிதழ்கள்,பதக்கங்கள் பெற்றார்கள். பங்கேற்ற மாணவ,மாணவியர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள்,பதக்கங்கள் வழங்கப்பட்டது.இப்போட்டிக்கு நடுவராக இருந்த சுரேகா அவர்களுக்கு புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒருங்கிணைப்பாளர் செ.கர்ணன் இயற்கை விவசாயி கிருங்கை திருமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் தங்கம் அடைக்கன்,கல்லனை சுந்தரம் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றார்கள்.
பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா நன்றியுரை வழங்கினார்.