விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பு பணியின் போது கடந்த 9ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் மாரியம்மாள் வயது 47 என்ற பெண் ஒருவர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுவது சிகிச்சை பெற்று வந்தார்.

வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர் பொன்னுபாண்டியை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி கண்ணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில் சிவகாசிகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து இந்த வெடி விபத்து சம்பவத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.













; ?>)
; ?>)
; ?>)