• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் -போலீசார் விசாரணை

ByA.Tamilselvan

Nov 18, 2022

இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பயணத்தில் உள்ளார் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கபட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைபயணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷெகானில் நடைபெற்று வருகிறது. சாவர்கருக்கு குறித்து கருத்து தெரிவித்ததாக கூறி ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் ஷேகானில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராகுல்காந்தியின் நடைபயணம் அடுத்ததாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் நுழைய உள்ளநிலையில் இந்தூரில இனிப்பு கடை ஒன்றில் கிடந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.