சூர்யா நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் தற்போதைய தகவல்களுடன் புகைப்படங்களையும் பார்க்கலாம்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.சத்யராஜ், வினய், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, இளவரசு, சுப்பு பஞ்சு உள்பட பலர் நடித்துள்ளனர்.
ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4 வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகள் 50 சதவித பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கும் சூழலில் பட வெளியீடு கடைசி நிமிடத்தில் மாற்றி வைக்கப்படுமா என்ற சந்தேகம் அனைவரிடமும் உள்ளது.ஆனால், சன் பிக்சர்ஸ் அப்படி எந்த ஊசலாட்டமும் இன்றி படத்தின் விளம்பரங்களை முடுக்கிவிட்டுள்ளது.
எதற்கும் துணிந்தவனில் சூர்யாவின் கதாபாத்திரம் குறிடத்த மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது. இதில் அவர் வழக்ககுரைஞராக நடித்துள்ளார்.ஜெய் பீம் படத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நீதிமன்றத்தில் தனது வாதத்திறமையால் அதிரடி காட்டிய வழக்குரைஞர் கதாபாத்திரத்தை போலன்றி இதில் ஆக்ரோஷமான வழக்குரைஞராக சூர்யா நடித்துள்ளார்.
காதல், நகைச்சுவை, சென்டிமெண்ட், சண்டைகள் என அனைத்தும் அமைந்த மாஸ் என்டர்டெயினராக எதற்கும் துணிந்தவன் உருவாகியுள்ளது.2022 இன் முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக எதற்கும் துணிந்தவன் அமையும் என்பது அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையாக உள்ளது.
                               
                  












              




; ?>)
; ?>)
; ?>)