• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருவாடனையில் அரசின் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளால் ஆபத்து..!

அரசு பள்ளி மற்றும் அரசு விழிப்புணர்வு பதாகைகளை மறைத்து அனுமதியில்லாமல் வைத்த தடை செய்யப்பட்ட ப்ளக்ஸ் போர்டுகள்.


திருவாடானை பகுதியில் நகர் முழுவதும் ஆங்காங்கே தடைசெய்யப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவு உள்ள நிலையில், அதை காற்றில் பறக்க திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மறைத்தும், நான்கு சந்திப்பு சாலையில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் வைக்கப்பட்ட கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாம் பற்றிய விவரங்கள் அடங்கிய ப்ளக்ஸ் போர்டை மறைத்து வங்கி நிர்வாகம் சார்பில் அதன் மேலேயே மறைத்து வைக்கப்பட்டுள்ளது.


பிளக்ஸ் போர்டுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வைக்க வேண்டுமானால் அனுமதி பெற வேண்டும் ஆனால் இங்கு எவ்வித அனுமதியும் இல்லாமல் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளால் ஆபத்தாக உள்ளது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்;கின்றனர்.