• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டாணாக்காரன் பட டிரைலர் வெளியீடு.!

நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதை.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 8-ம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. அதற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.