• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் விவசாய நிலம் பாதிப்பு.., பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

ByG.Suresh

Dec 15, 2023

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் யூனியனுக்குட்பட்ட கண்டிப்பட்டி சேகரம், செங்குளிப்பட்டி சிறுசெங்குளிப்பட்டி, துவாரிப்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில் செங்குளிப்பட்டியில் மண் குவாரி அமைத்து மண் அள்ளுவதனால் செங்குளிக்கண்மாய்க்கு வரும் நீர்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றியுள்ள சுமார் 200 ஏக்கருக்கு மேலாக விவசாய நிலங்களும் பாதிப்படையும் நிலையில் உள்ளது, மேலும் கால்நடை மேய்ச்சல் தண்ணீர் வசதி இல்லாமல் பாதிப்பு ஏற்படும் அச்சம் உள்ளது, நான்கு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே அனைவரின் வாழ்வாதாரம் உள்ளதால் பாதிப்பு ஏற்பட்டு அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை இருப்பதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் மண் குவாரி குத்தகை உரிமம் வழங்கியதை பார்வையிட்டு மறுபரிசீலனை செய்து குவாரி குத்தகை உரிமைத்தை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என கூறி 4 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.