தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் வன சரகத்திற்குட்பட்ட காடுவெட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றது.

இந்த விவசாய நிலங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் பறவைகள் எச்சம் மூலமாக தானாக வளர்ந்துள்ள நிலையில் அதனை விவசாயிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேவதானப்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட காடுவெட்டி பகுதியில் உள்ள தனியார்க்கு சொந்தமான விவசாய நிலங்களில் உள்ள சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தோட்டத்தில் இருந்த சுமார் 18க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வெட்டி கடத்தி விட்டு சென்றதாகவும்,

இது குறித்து தேவதானப்பட்டி வனத்துறை மற்றும் பெரியகுளம் காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து தோட்டத்து விவசாயி வாசுதேவன் கூறுகையில்,

கடந்த மாதம் எனது தோட்டத்தில் தானாக வளர்ந்த எட்டு சந்தன மரங்கள் மற்றும் பக்கத்து தோட்டத்தில் பத்து சந்தன மரங்களும் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறை மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மேலும் இருக்கின்ற சந்தன மரங்களை பாதுகாப்பதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.













; ?>)
; ?>)
; ?>)