• Sat. Sep 23rd, 2023

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடு.? இன்று முதல்வர் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும் தமிழகத்தில் ஒமிக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடு விதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *