• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை வி.ஜி.எம் மருத்துவமனை சார்பாக “க்யூர் வித் கேர்” புற்றுநோய் விழிப்புணர்வு திட்டம். பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்பு…

BySeenu

Feb 5, 2024

உலக அளவில் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இந்நிலையில்,கோவை வி.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து யங் இந்தியன்ஸ், ஒய்.ஐ. அக்சஸபிலிட்டி ஹெல்த் அண்ட் பிராண்டிங் வெர்டிகல்ஸ், கோவை ரோட்டரி டவுன் டவுன், ஸ்மார்ட் சிட்டி, ரோட்டரி கிழக்கு சங்கம்,ரவுண்டு டேபிள் கர்ட் 186,ரேஸ் கோர்ஸ் வாக்கர்ஸ் சங்கம், அலையன்ஸ் கிளப் ஆகியோர் இணைந்து புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இதில் வி.ஜி.எம்.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,தமிழக அரசு தற்போது ஏற்படுத்தியுள்ள மருத்துவ காப்பீடு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார். குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை பொதுமக்கள் அதிக அளவில் வரவேற்றுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் கோகுல், சுமன், வம்சி, மதுரா, மித்ரா உட்பட மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.