• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜோக்கர்ன்னு கூப்பிட்டா முத்தம்தான்! – நதியாவை மிரட்டிய நடிகர்!

கோலிவுட்டில் இன்றும் இளமையாக வலம் வருபவர் நதியா மட்டுமே. நதியா தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாளத்தில் வெளிவந்த நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஒரு சமயத்தில், மலையாள நடிகரான முகேஷ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நடிகர் முகேஷ் நல்ல நகைச்சுவையாக பேசக் கூடியவராம். இதனால் ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் இருக்கும்போது முகேஷ் ஒரு நல்ல ஜோக்கர் என நதியா கூறியுள்ளார். அதனை கேட்ட அனைவரும் சிரித்து விட்டார்களாம். இதனால் நதியா முகேஷை பார்க்கும் போதெல்லாம் ஜோக்கர் என கூறி கிண்டல் செய்துள்ளார்.

இதனால் கடுப்பான முகேஷ், இனிமேல் என்னை ஜோக்கர்னு கூப்பிட்டா உன்னை கிஸ் பண்ணிடுவேன் என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நதியா எங்கே சொன்னது போல் நிஜமாகவே முத்தம் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் அன்றிலிருந்து ஜோக்கர் என கூப்பிடுவதையே விட்டுவிட்டாராம். முன்னதாக முத்தக்காட்சிக்கு பயந்து நடிகர் கமலுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை நதியா வேண்டாம் என மறுத்தது குறிப்பிடத்தக்கது.