• Fri. Apr 26th, 2024

CUET (க்யூட்) தேர்வு முடிவு இன்று வெளியீடு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..

Byகாயத்ரி

Sep 15, 2022

CUET UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஆறு கட்டங்களில் கடந்த ஜுலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களில் நடைபெற்றது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 8ம் தேதி இத்தேர்வின் உத்தேச விடைக்குறிப்பை (Provisional Answer Keys) தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது.

நாடு முழுவதும் சுமார் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கியூட் நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்பட இருக்கின்றன. CUET UG தேர்வு முடிவுகள் வெளியானதும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *