வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக புதுவிதமான தள்ளுபடி அறிவிப்புகளை ஜவுளிக்கடை நிர்வாகங்கள் அறிவிப்பதுண்டு.

அதன் ஒரு பகுதியாக புதுவித முயற்சியாக சுற்றுச்சூழலின் அவசியத்தை பொதுமக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் இயங்கி வரும் எம்ஆர்பி ஜவுளிக்கடையில் புது ஆடைகள் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கடையின் உரிமையாளரும் பசுமை செயற்பாட்டாளருமான பாரதிதாசன் மா பலா கொய்யா உள்ளிட்ட பழ வகைகளான மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் இவர் 12 ஆண்டுகளாக மரக்கன்றுகள் வழங்கி வருவது குறிப்பிட்டதக்கது. தலைமையாசிரியர் தென்னவன், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.