கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கேரளா கள்ளு கடைகளில் உள்ள கள்ளில் கலப்பதற்காக சுமார் 5,145 லிட்டர்கள் எரிசாராயத்தை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்து இருந்த வழக்கில் தொடர்புடைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிஜுகுமார் @ பிஜு (48) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அந்த நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
மேற்படி உத்தரவின்படி எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்து இருந்த வழக்கு குற்றவாளியான பிஜுகுமார் @ பிஜு (48) என்பவரை குண்டர் (Bootlegger) தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.













; ?>)
; ?>)
; ?>)