• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்ற நடவடிக்கை; தமிழக அரசு அதிரடி

கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கோயில் நில அபகரித்தவர்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.


இதன்படி பல ஏக்கள் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . இந்நிலையில் கோயில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் எத்தனித்து வந்தனர். இந்த விவரம் அரசுக்கு தெரிய வந்தது.

இதன்படி இது போன்று வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறாமல் இருப்போர் மீதும் கடும் குற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரச உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பான விசாரணைக்கு கோயில் நிர்வாகிகள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். குற்றம் அறிந்தவர்கள் யாரும் இந்த புகாரை அளிக்க முன் வரலாம். இதனால் பலர் ஆடிப்போயுள்ளனர்.