• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரவுடிகளை என்கவுண்டர் செய்து குற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்..,

ByB. Sakthivel

Apr 30, 2025

புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.இதனால் தமிழகத்தில் என்கவுன்டர் நடப்பது போல் .புதுச்சேரியில் கடும் நடவடிக்கை தேவை, ரவுடிகளை என்கவுண்டர் செய்து குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரியில் ரவுடிசம் அதிகமாக உள்ளது இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க விரைவில் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.

பாஜக பிரமுகர் கொலையை விசாரிக்க சிபிசிஐடி விசாரணையை முதலில் கேட்டேன்.கேட்ட மறுநாளே முதல்வர்,ஆளுநர் அலுவலத்திற்கே வெடி குண்டு மிரட்டல் வருகிறது புதுச்சேரியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று கூறிய அவர் இதனால் என்கவுன்டரை கொண்டு வர வேண்டும்.இதற்குரிய அதிகாரத்தை புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். பல வழக்குகளில் குற்றவாளிகள் வெளியே வந்து விடுகிறார்கள், ரவுடியிசத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை என்றார்.