மதுரை சிந்தாமணி அருகே தமிழகத்தின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மும்பையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

இங்கிருந்து காரில் புறப்படும் டோனி சிந்தாமணி பகுதியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சி முடித்து மீண்டும் அங்கிருந்து காரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வரும் தோனி இங்கிருந்து தனி விமானம் மீண்டும் மும்பை செல்கிறார். முதல் முறையாக மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனி வருகையொட்டி காலை முதலே அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

தோனி வருகையை ஒட்டி விமான நிலையத்தில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மதுரை விமான நிலையத்திலிருந்து வெள்ளை நிறம் கொண்ட TNB AT 7777 என்ற நம்பர் காரில் தோனி பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் TN13 Av7777 என்ற காரும் தயார் நிலையில் உள்ளது.