விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, , உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த மாதம் தீபாவளி சீசன் முடிவடைந்ததை முன்னிட்டு பட்டாசு ஆலைகளுக்கு அக்டோபர் 15 ம்தேதி முதல் விடுமுறை விடப்பட்டன.

மத்திய, மாநில, அரசுகள் பட்டாசு உற்பத்திக்கு ஆதரவாக இருந்ததால் வட மாநிலங்கள், பிற மாவட்டங்களிலும் எதிர்பார்ததை விட பட்டாசுகள் அதிக அளவு விற்பனையானது. பெரும்பாலும் பட்டாசு ஆலைகளில் பட்டாசு கையிருப்பு வைக்கப்படும். ஏனெனில் ஐப்பசி, கார்த்திகை, இரண்டு மாதங்கள் தொடர்ந்து மழை பெய்யும் அப்போது பட்டாசு உற்பத்தி செய்ய இயலாது. கையிருப்பாக வைக்கப்பட்ட பட்டாசுகளை கிறிஸ்துமஸ், வருட பிறப்பிற்கு, பட்டாசுகள் விற்பனை செய்யப்படும்.

ஆனால் தற்போது பட்டாசுகள் கையிருப்பு இல்லாததால், வட மாநிலங்களில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகை, மற்றும் ஆங்கில புத்தாண்டு, ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதால் பட்டாசு ஆலைகளில் தாமதம் இன்றி பட்டாசு உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது . தொடர்ந்து பட்டாசு உற்பத்தியை விபத்தில் இல்லாமல் தொடங்குவது என தொழிலாளர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தாமதமின்றி பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்கப்பட்டதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.














; ?>)
; ?>)
; ?>)