உசிலம்பட்டியில் சிபிஐஎம் கட்சி சார்பில் வக்பு சட்டம், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் வக்பு வாரிய சட்டத்தை வாபஸ் பெற கோரியும், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலையை உயர்வை கைவிடு கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்ற சூழலில்,
இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் இந்திய கம்யூனிஸ்( மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வக்பு வாரிய சட்டத்தை வாபஸ் பெற கோரியும், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலையை உயர்வை கைவிடு கோரியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் உசிலம்பட்டி ஒன்றியம் மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.