விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது.
இந்த நிலையில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் நகரும் நிரந்தர உண்டியல் (01) மற்றும் தற்காலிக உண்டியல்கள்(4) மற்றும் கோசாலை உண்டியல்களை இருக்கன்குடி திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் இராமமூர்த்தி பூசாரி மற்றும் உதவி ஆணையர் /செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது.
மேலும் இதில் நிரந்தர உண்டியல்கள் (11) மற்றும் நகரும் நிரந்தர உண்டியல் (01) மூலம் ரூ.64,95,889/-, தற்காலிக உண்டியல்கள்(4) மூலம் ரூ3,22,689/-, கோசாலை உண்டியல் மூலம் 5.1.96,348/-ஆகக் கூடுதல் ரூ.70,14,926 ரொக்கமும் 164.800 கிராம் பலமாற்று பொன் இனங்களும், 845.400 கிராம் பலமாற்று வெள்ளி இனங்களும் கிடைக்கப்பெற்றது.

மேலும் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் இராமமூர்த்தி பூசாரி, உதவி ஆணையர் /செயல் அலுவலர் இளங்கோவன், பரம்பரை அறங்காவலர்கள், விருதுநகர் சரக ஆய்வாளர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஏராளமான பெண் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.