மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் அருகில் மதிமுக நிர்வாகிகள் திருச்சிராப்பள்ளி மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார் தலைமையில் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராமமூர்த்தி முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வையம்பட்டி ராஜா,

ஐந்தாவது வட்ட செயலாளர் சன் நாகசுந்தரம், வட்ட பிரதிநிதி குமார் மற்றும் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம், பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் ஆகியவை வழங்கினார்கள்.
