• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வீரமே வாகை சூடும் கதாநாயகிக்கு கொரோனா பாதிப்பு!

து.ப.சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்த மாதம் 26ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜனவரி 14ம் தேதி சென்னை வடபழநியில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் டிம்பிள் ஹயாத்தியும் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிலையில் டிம்பிள் ஹயாத்தி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மறுநாளே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சமூக வலைதளத்தில், “அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது, மற்றபடி நலமாக இருக்கிறேன். ஆலோசனைப்படி என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் இரண்டு முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டதால்தான் லேசான பாதிப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், மாஸ்க் அணிய வேண்டும், சானிட்டைஸ் செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஆனால் அவர் கலந்துகொண்ட இந்தநிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர் அவர்களை என்ன செய்வது யாருக்கு தொற்று இருக்கிறது என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் பயத்தில் உள்ளனர்.