தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருகிறது. பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கூட வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது. எனவே மீண்டும் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராதாவுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டிருப்பதால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் உட்பட இருவருக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது அவருடைய மனைவி ராதாவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இபிஎஸ் மனைவிக்கு கொரோனா..!
