• Sat. Sep 23rd, 2023

குக் வித் கோமாளி சீசன் மூன்று தொடக்கம்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது இதன் 3வது சீசன் வருகிற 22ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள். இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடும் போட்டி நிலவுகிறது. நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சமீபத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிய ரோஷினி, நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், மனோபாலா, பாடகர் அந்தோணி தாசன், நடிகை வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், என 8 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, குரேஷி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக களமிறங்குகிறார்கள் ஜனவரி22ம் தேதி துவங்கி வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *