• Fri. Apr 18th, 2025

ஆளுநர் ரவி செயலால் மீண்டும் வெடித்துள்ள சர்ச்சை!!

ByA.Tamilselvan

Jan 10, 2023

நேற்றைய தினம் தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசின் உரையை மாற்றிப்படித்தது, படிக்காமல் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது. நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும் என சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.


அதே போல் கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு ஆளுநர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.