மதுரை விமான நிலையத்தில் முதல்வர் வருகையின் போது சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பிய இளைஞரை போலீசார் வாய மூடி காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் விமான மூலம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முதல்வரை பயணிகள் புறப்பாடு இடத்தில் திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர் அப்போது தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சேர்ந்த அக்ஷயா மார்க்கண்டேயர் என்ற இளைஞர் திடீரென முதல்வர் முன்பு சர்ச்சைக்குரிய கோசம் எழுப்பியதாக தெரிகிறது உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். உடனே செய்தியாளர்கள் அந்த இளைஞரிடம் என்ன கோஷம் எழுப்பினார்கள்? யாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள் என்று கேட்டபோது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக் கலவரத்தை தூண்டுகிறார்கள் என்றார் உடனே போலீசார் அந்த இளைஞரின் வாயை பொத்தி காவல்துறை வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினார்.


போலீசாரின் விசாரணையில் அந்த இளைஞர் தூத்துக்குடி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் மகன் அக்சய் மார்க்கண்டேயன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் டெல்லியில் சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
திருப்பரங்குன்றம் மழையில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் நீதிபதி தீர்ப்புக்கு எதிராக முதல்வர் வருகையின்போது சர்ச்சையாக கோஷம் எழுப்பியது தெரியவந்துள்ளது.




