விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் அப்பைய நாயக்கன்பட்டி கிராமத்தில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் திருப்பதி தலைமை வகித்தார்

சிறப்பு அழைப்பாளராக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் கலந்து கொண்டு பேசியது
பாரதிய ஜனதா கட்சியினர் சிறப்பு தீவிர வாக்காளர் புதுப்பிப்பு பணிகள் மூலம் வாக்குகளை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதனை தடுக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட வழியில் போராடி வருகிறார்.
தமிழக அரசு பொறுப்பேற்றதும் மகளிருக்கான கட்டணமில்லா இலவச பேருந்து, மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் மகளிருக்கான உரிமை தொகை,

கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இச்சாதனைகளை கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் தெரிவித்து இளைஞர்களின் ஓட்டுகள் உட்பட அனைத்து ஓட்டுகளையும் பெறுவதற்கு திமுக கட்சி தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.
சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் அதிக வாக்குகள் பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




