விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது
இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், இந்து அமைப்பினர்கள், சிலை பொறுப்பாளர்கள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

இதில் பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலை வைக்கும் இடத்தில் முறையாக அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் விண்ணப்பங்கள் வழங்கி முறையாக அனுமதி பெற வேண்டும் அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் சிலை வைக்க வேண்டும், விநாயகர் சக்தி அன்று கடந்த ஆண்டு சிலை வைத்த இடங்களுக்கு மட்டும் தான் அனுமதி புதிதாக சிலை வைக்க அனுமதிக்கப்படாது, சிலை வைத்த இரண்டு நாட்களும் சிலை பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்கிறது அவசியம், விநாயகர் சிலை உயரம் 10 அடிக்குள் இருக்க வேண்டும், சிலை வைக்கும் இடத்தில் மண் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனை அருகே விநாயகர் சிலை நிறுவக்கூடாது, மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பிற சமுதாயத்தின் அல்லது தனிநபர் மனம் புண்படாமல் கோஷங்களை எழுப்பவும் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாட்டுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிலை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் காவல்துறை ஆய்வாளர்கள் சார்பாய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.