விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் அனைத்து கட்சி வாக்காளர் புதுப்பிப்பு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திக் ராஜ் பேசியது

வாக்காளர் புதிபிப்பது சம்பந்தமாக தேர்தல் சமயத்தில் வழக்கமாக நடைபெறுவது ஒன்றுதான். மற்றபடி எவ்வித குளறுபடியும் நடைபெற வாய்ப்பில்லை என கூறினார்.
அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முனியசாமி ,மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்பட அதிமுக கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

உடனடியாக திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாண்டியன் பாண்டியன், கிருஷ்ணகுமார், தமிழர் இனமுண்டு, தமிழ் மொழி வளரவும், சமுதாய கலாச்சாரம் வளர்வதற்கு தமிழ் பற்று அவசியம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசு முயல்கிறது. ஆகையால் வாக்காளர் பட்டியல் புதுபிப்பதை வன்மையாக திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்கள்.













; ?>)
; ?>)
; ?>)