விருதுநகர் மாவட்டத்தில் வரும் ஏழாம் தேதி எட்டாம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பயணம் மூலம் மக்களை சந்திக்கிறார். இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் வரும் ஏழாம் தேதி மக்களை சந்திக்கும் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் சிவகாசி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழகசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே
டி .ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசியது வரும் ஏழாம் தேதி மாலை பட்டாசு நகரான நமது சிவகாசிக்கு வருகை தரும் பொதுச் செயலாளரும் வருங்கால முதலமைச்சருமான எடப்பாடியாருக்கு நிர்வாகிகள் திரண்டு உற்சாக வர வாய்ப்பு அளிக்க வேண்டும்.
சிவகாசி தொகுதியில் ஹவுசிங் போர்டு பகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி கங்கா குளம் திருத்தங்கல் தேவர் சிலை மாரியம்மன் கோவில் ,அண்ணா சிலை, காமராஜர் சிலை அம்பேத்கர் சிலை, சிவகாசி காரனேஷன் பஸ் ஸ்டாப், தேவர் சிலை, தேரடி முக்கு, அம்பேத்கர் சிலை, வழியாக ரோடு ஷோ
மூலம் மக்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருகே புதிதாக தொடங்கியுள்ள நகைக்கடை முன்பு சிறப்புரையாற்றுகிறார். தின முன்னாள் அமைச்சர் கே .டி .ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ஏற்கனவே விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு சுமார் 25 ஆயிரம் பேருக்கு கடிதம் மூலமும் வரவேற்பு அளிப்பது குறித்து தெரிவித்துள்ளார்.
சிவகாசி தொகுதியில் சுமார் 50,000 பேர் கட்சி கொடி ஏந்தி திரண்டு வரவேற்பு அளிக்க வேண்டும். அதிமுக நிர்வாகிகள் முன்னாள் யூனியன் சேர்மன் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் பலராமன், கருப்பசாமி பாண்டியன், பாலாஜி, ஆனையூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.