நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் இன்று (22.10.2025) நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன்; அவர்கள், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.முகம்மது ஷா நவாஸ் அவர்கள், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.நாகை மாலி ஆகியோர் உள்ளனர்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக தொடர்புடைய மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தின் போது, நெல் விளைகின்ற அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல்லினை பாதுகாக்க வேண்டுமெனவும், அதனை உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு மற்றும் நெல் அரவை ஆலைக்கு தாமதமின்றி அனுப்ப வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, 3 முறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் டெல்டா மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள்ளார்கள்;. அதனடிப்படையில், துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது.