• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

BySeenu

Jun 21, 2024

கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை நவீன முறையில் தரம் உயர்த்துவது ,மற்றும் பள்ளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாநகராட்சி கல்வி குழு சார்பாக நடைபெற்றது.

கோவை மாநகராட்சி அரசு பள்ளிகளுக்கு நிறைவேற்ற பட உள்ள புதிய திட்டங்கள் மற்றும் பள்ளிகளின் தர மேம்பாட்டை உயர்த்துவது தொடர்பாக கோவை மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாலதி தலைமையில் ஆலோசணை கூட்டம் மாநகராட்சி வளாக அரங்கில் நடைபெற்றது.இதில் மாநாகராட்சி பொறியாளர்கள், மண்டல அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள்,கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர். இதில், மாநகராட்சி அனைத்துப் பள்ளிகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்த ஏற்கனவே நடந்த குழுக் கூட்டத்தில் ஆணையர் அறிவுறுத்திய நிலையில், தற்போது . மாணாக்கர்களின் நலன்கருதி உடனடியாக செயல்படுத்தவும், அனைத்துப் பள்ளிகளுக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடப்பட்டது. மேலும் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் குறித்தும்,. கல்வியாண்டு தொடக்கத்திலேயே கற்றல் கையேடு வழங்குதல்,
மாநகராட்சி பள்ளிகளில் கழப்பறை வசதிகள், கட்டிடம் மற்றும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும், பல்வேறு பள்ளிகளில் மைதானத்தை சீரமைப்பது, சேதமடைந்த சுற்றுச்சுவர்களை சரி பார்ப்பது, உயர் நிலை , மேல் நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது என பல்வேறு பணிகள் நடைபெறாமல் இருப்பதை சுட்டி காட்டிய கல்வி குழுவினர் உடனடியாக இந்த பணிகளை செயல்படுத்த முன்வரவேண்டும் என கூறினர்.