சென்னை அடுத்த குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் பல்லாவரம் நடுவன் மாவட்டம் கிழக்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் பல்லாவரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் அறிமுகம் மற்றும் உறவுகளுடன் கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மண்டல செயலாளர் தென்றல் அரசு தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்நிலையில் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்ச்சங்க பாசறை ஒருங்கினைப்பாளர் அன்பு தென்னரசு, பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் அய்யா கார்த்திகேயன், சிறுபான்மை மக்கள் நலகட்சியின் நிறுவனர் பேராயர் சாமுவேல் ஏசுதாஸ், தமிழ் தேசிய கிறிஸ்துவர் இயக்கம் நிறுவனர் குரல் இனியன், நிகழ்ச்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் இனியன் ஜான் கலந்து கொண்டு மறைந்த தீலிபன் அவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியும், தா.வெ.க பிரச்சார கூட்ட நெரிசலில் இறந்த 40 பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.
கலந்துரையாடலின் போது நாம் தமிழர் கட்சி வெற்றிபெற்றால் நீர்நிலைகள் கனிம வளங்கள் பாதுகாக்கபடும் , தரமான கல்வி, தண்ணீர் வழங்கபடும், அனைவருக்கும் தகுதிக்கு ஏற்றாற்போல் தொழில்கள் அமைத்தும், வேலைவாய்ப்பு புதியதாக உருவாக்கி தரப்படும் என பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தி வேட்பாளர் அவர்கள் நாம்தமிழர் கட்சி உறவுகளுடனும், பொதுமக்களுடனும் இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாப்போம் என உறுதிமொழி அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தொழிற்ச்சங்க பாசறை ஒருங்கினைப்பாளர் அன்பு தென்னரசு பேசுகையில் த.வெ.க கட்சி பிரச்சாரம் ஒரு விபத்தாகவே கருத வேண்டும் இதை ஒரு அரசியலாக்க கூடாது என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைபாடாக உள்ளது எனவும், செந்தமிழ் சீமான் தம்பி விஜய்க்கும் இச்சம்பவம் குறித்து மிகுந்த வருத்தம் இருக்கும் எனவும் தா.வெ.கட்சியினர் ஒரு நெறிமுறைபடுத்தி இருக்க வேண்டும்,
இது ஒரு திட்டமிட்ட சதி என கூற இயலாது என்றும், பல்வேறு அரயல் நிகழ்வுகளில் விபத்து நடந்தாலும் அரசியலாக்க கூடாதும் எனவும் தன் தொண்டர்களை தா.வெ.க தலைவர் விஜய் நெறிமுறைபடுத்த வேண்டும், ரசிகர்கள் வேறு தொண்டர்கள் வேறு என்பதை இந்த நிகழ்வு வெளிபடுத்தியுள்ளது என்றும் நண்பர்கள் ஊடகம், பத்திரிக்கை துறையினர் அனைவரும் நாம் தமிழர் கட்சியி பல்லாவரத்தில் வெற்றுபெறும் என தெரிவித்துள்ளதாக கூறினார்.