விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதியாக தேர்தல் கமிஷன் படிவம் 12டி வெளியிட்டுள்ளது. மேற்படி படிவத்தை சாத்தூர் தொகுதியில் இருக்கும் 286 வாக்கு சாவடியில் வாக்களிக்க உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மொத்த வாக்காளர்கள் 2328 அதில் முதியோர்கள், 1215. மாற்றுத்திறளாளிகள் 1113 வீட்டில் இருந்தே வாக்களிக்க வசதியாக படிவம் 12டி வழங்குவது மற்றும் அதைப் பெற்றுக் கொண்டு திரும்ப வழக்குவது குறித்து வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 286 வாக்குசாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.